Maintenance Tips for Road Master & Earth Master - Mahindra Construction Equipment
with you hamesha - 1800 209 6006
with you hamesha - 1800 209 6006 


சேவை பராமரிப்பு டிப்ஸ்

சேவை பராமரிப்பு டிப்ஸ்

  1. ஏர் லாக் சிக்கலைத் தவிர்க்க, ஃப்யூயல் டேங்க் கொள்ளளவில் 30% க்கு மேல் எப்போதும் ஃப்யூயல் அளவைப் பராமரிக்கவும்.
  2. ஏர் டேப் காரணத்தால் என்ஜின் அடிக்கடி அணைந்தால், ஃப்யூயல் ஃபில்டர் அல்லது வாட்டர் செபரேட்டர் சோக் உள்ளதா அல்லது சக்ஷன் லைன் தளர்வாக உள்ளதா என்பதைப் பார்க்கவும். ஃப்யூயல் சிஸ்டத்தை பிளீடு செய்யவும். இதன் மூலம் ஏர் பிளாக்கேஜை நீக்க முடியும்.
  3. ஸ்டார்ட்டர் மோட்டரை ஸ்டார்ட் செய்யும்போது 15 நொடிகளுக்கும் அதிகமாக கிரான்க் செய்யாதீர்கள். ஸ்டார்டர் மோட்டருக்கு பெரிய சேதம் ஏற்படாமல் இருக்க, ஒவ்வொரு கிரான்க்கையும் 10 நொடிகளுக்குள்ளேயே வைக்கவும்.
  4. டர்போ சார்ஜரின் லைஃபை அதிகப்பதற்கு என்ஜினை ஸ்டார்ட் செய்த உடனே வேகப்படுத்தாதீர்கள். மேலும் என்ஜினை நிறுத்துவதற்கு முன்பு குறைந்தபட்சம் 2 நிமிடங்கள் ஐடில் நிலையில் வைக்கவும்.
  5. பிரைமரி ஏர் ஃபில்டரை 50 மணி நேரத்தில் அல்லது கிளஸ்டரில் வார்னிங் தெரிந்தால், அதை மறக்காமல் சுத்தம் செய்ய வேண்டும்.
  6. ஏர் ஃபில்டரை சுத்தம் செய்யும்போது எப்போதும் காற்று உள்ளேயிருந்து வெளிப்புறமாக வரவேண்டும். எப்போதும் ஃபில்டரை தட்டக்கூடாது. ஏனென்றால் ஃபில்டர் சேதமாகிவிடலாம். என்ஜின் ஃபெயிலாகிவிடலாம்.
  7. தயாரிப்பாளர் பரிந்துரைத்த கால இடைவெளியில் பிரைமரி மற்றும் செகண்டரி ஏர் ஃபில்டர்களை மாற்றவும். மஹிந்திரா EarthMaster இன் பிரமைரி மற்றும் செகனண்டரி ஏர் ஃபில்டர் இரண்டையும் மாற்றுவதற்கான கால இடைவெளி 1000 மணி நேரம்
  8. என்ஜின் ஆயில் பிரஷர் குறைந்துவிட்டால், என்ஜின் ஆயில் பிரஷர் மற்றும் வெளிப்புறத்தில் கசிவு இருக்கிறதா என்று பார்க்கவும். ஆயில் அளவு குறைவாக இருந்தால், ஆயிலை நிரப்பவும். ஆயில் அளவு அதிகமாக இருந்தால், என்ஜின் ஆயிலுடன் டீசல் கலக்கிறது என்று அர்த்தம். அப்படியும் பிரச்சினை தீரவில்லை என்றால், அங்கீகாரம் பெற்ற டீலரை அழைக்கவும்.
  9. . ஆயிலை நிரப்பிய பிறகும்கூட என்ஜின் ஆயில் இண்டிகேட்டர் குறைவான அளவை காட்டினால், எலக்ட்ரிகல் கனெக்ஷன் கோளாறு அலல்து என்ஜின் ஆயில் ஃபில்டர் கிளாகிங் அல்லது என்ஜின் ஆயில் கூலர் கிளாகிங்கை செக் செய்யவும்.
  10. என்ஜின் குளிர்ச்சியாக இருக்கும்போது எப்போதும் என்ஜின் கூலண்ட் லெவலையும் செக் செய்யவும்.
  11. டிரான்ஸ்மிஷன் ஆயில் அளவை என்ஜினை ஓடவிட்டு மற்றும் ஆயில் குளிர்ச்சியாக இருக்கும்போது செக் செய்ய வேண்டும். இந்த விஷயத்தில் டிரான்ஸ்மிஷன் ஆயில் அளவு டிப் ஸ்டிக்கில் "MAX" மற்றும்"MIN" இடையில் இருக்க வேண்டு
  12. ம்
  13. என்ஜின் பாகங்களின் ஆயுளை அதிகரிக்க என்ஜின் சர்வீஸை முழுமையாக செய்த பிறகு என்ஜின் பாகங்களுக்கு போதுமான லூப்ரிகேஷன் செய்யப்படுவதை உறுதி செய்வதற்காக என்ஜினை 10 நொடிகள் டெட் கிரான்க் செய்யவும்.

"எங்கள் தொழில்துறையில் சிறந்த வாடிக்கையாளர் ஆதரவை வழங்குவதே எங்கள் உத்தி - வாடிக்கையாளரை எங்கள் வணிகத்தின் மையத்தில் வைக்கிறோம்.