Heavy Earth Moving Equipments - Mahindra Construction Equipment
with you hamesha - 1800 209 6006
with you hamesha - 1800 209 6006 


தயாரிப்பு மற்றும் தீர்வுகள்

மஹிந்திரா கட்டுமான உபகரணங்கள் - தயாரிப்பு வகை

பல ஆண்டுகளாக, கன்ஸ்ட்ரக்ஷன் எக்விப்மெண்ட்டுகள் இந்தியாவில் ஒரே மாதிரியாக இருக்கின்றன., ஆனால் உலகம் முழுவதும் தொழில்நுட்பம் வேகமாக முன்னேறி வருகிறது. அதிகரித்து வரும் எரிபொருள் விலையும், அதிகரித்து வரும் இயக்கச் செலவுகளும் வாடிக்கையாளர்களின் இலாபத்தில் பிரச்சினையை உருவாக்குகின்றன. இந்தியாவின் முன்னணி ஆட்டோமோட்டிவ் மற்றும் டிராக்டர் உற்பத்தியாளரான மஹிந்திராவில் உள்ள எங்கள் டிசைனர்கள், தற்போதைய சூழ்நிலையைப் பார்த்து, இந்தியாவிலுள்ள பயன்பாட்டு பேட்டர்ன்களுக்காக தாங்களே டிசைன் செய்த கன்ஸ்ட்ரக்ஷன் எக்விப்மெண்ட்டுகளில் சில புதுமைகளை புகுத்தியுள்ளனர்..

மஹிந்திரா எர்த்மாஸ்டர்

மஹிந்திராவில் உள்ள டிசைனர்கள் டெக்னாலஜியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, புதிய EarthMaster SX SX & VX ஐ உருவாக்குவதன் மூலம் பேக்ஹோ லோடர்கள் பிரிவில் புதுமைகளை புகுத்தியுள்ளனர். அவை இரண்டும் பிரத்தியேகமாக இந்திய-பயன்பாட்டு முறைகளுக்கு ஏற்றவை மற்றும் பேக்ஹோ லோடர் வகையின் அனைத்து நிபந்தனைகளுக்கும் உட்படுகின்றன. 55 kW (74 HP), CRDI மஹிந்திரா என்ஜின், சிறந்த எரிபொருள் திறன் மற்றும் உயர்தர பேக்ஹோ செயல்திறன் ஆகியவற்றுடன், EarthMaster SX & VX உங்களுக்கு மிகச் சிறந்த சேமிப்பையும் தரும்.

மஹிந்திரா பிராண்டின் பாரம்பரியம் இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பே நடைமுறைக்கு வந்தது. இந்தியாவில் போக்குவரத்து துறையில் புரட்சியை ஏற்படுத்திய வரலாற்றைக் கருத்தில் கொண்டு, மஹிந்திரா மீண்டும் EarthMaster மூலம் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அவற்றின் என்ஜின்கள் நாக்பூரில் தயாரிக்கப்படுகின்றன, மீதமுள்ள மெஷின்கள் புனேவுக்கு அருகிலுள்ள எங்கள் சாக்கன் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டு அசெம்பிள் செய்யப்படுகின்றன. இவை உலகத்தரம் வாய்ந்த அக்ரகேட்ஸ் கொண்ட உள் நாட்டு மெஷின்கள் ஆகும். மேலும் இந்திய வாடிக்கையாளர்கள் மற்றும் அவர்களின் தேவைகளை பற்றி விரிவான ஆராய்ச்சி செய்த பிறகு தயாரிக்கப்பட்டுள்ளன.

EarthMaster இந்தியாவில் தனக்கான இடத்தைப் பிடித்துள்ளது. மேலும் பத்து ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகப்படுத்தப்பட்ட இந்த வெஹிக்கிள் 5000+ மகிழ்ச்சியான இந்திய வாடிக்கையாளர்களைத் தனக்கெனக் கொண்டுள்ளது. இது கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவின் கட்டுமானத்திற்கு நிறைய உதவியுள்ளது, ஏனெனில் இது இந்தியர்கள் மற்றும் இந்தியாவுக்காக இந்தியாவில் தயாரிக்கப்பட்டது.

மாடல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்

மஹிந்திரா ரோட் மாஸ்டர்

இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாட்டில், 75% சாலைகள் விரிவாக்கத் திட்டங்களாகவோ அல்லது கிராமப்புற/சிறு நகர்ப்புறத் திட்டங்களாகவோ, இருக்கும் இது அதன் உற்பத்தித்திறனிற்கு உகந்ததாக இருக்கும். இந்திய சாலைகள் மற்றும் அதன் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் பற்றிய ஆழமான ஆய்வு, 20000+ நாட்கள் தயாரிப்பு மேம்பாடு மற்றும் நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் 6000 மணிநேர விரிவான சோதனைகள் போன்றவற்றின் மூலம், மஹிந்திராவின் மோட்டார் கிரேடர் வளர்ந்து வரும் இந்தியாவை கட்டுமானம் செய்வதற்கு உதவி செய்யகூடிய சிறந்த மெஷினாக இருக்கும். 13 மாநிலங்களில் ரோடு கான்ட்ராக்டர்கள் மற்றும் பிற எக்கோசிஸ்டம் அமைப்புகள் இதில் உள்ளன. 5000+ வலிமையான மஹிந்திரா ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு யூனிட்டால் டிசைன் செய்யப்பட்டது.

மஹிந்திராவின் உலகத் தரம் வாய்ந்த சாக்கன் தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்படுகிறது. முக்கிய கட்டமைப்பு பாகங்களுக்கு ரோபோடிக் வெல்டிங் டெக்னாலஜி பயன்படுத்தப்படுகிறது.

மாடல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்