Mahindra launches the New BSIV Construction Equipment Range
with you hamesha - 1800 209 6006
with you hamesha - 1800 209 6006 


பிரெஸ் நோட்

மஹிந்திரா புதிய BSIV கன்ஸ்ட்ரக்ஷன் எக்விப்மெண்ட்ரேஞ்ஜை அறிமுகப்படுத்தியது

EarthMaster SX Smart50 உடன் லோயர் HP BHL செக்மெண்ட்டில் நுழைவதாக அறிவிக்கப்பட்டது

Mahindra Construction Equipment - PR

புனே, ஜூன் 14, 2021: 19.4 பில்லியன் (1940 கோடி) டாலர் மதிப்பிலான மஹிந்திரா குழுமத்தின் ஒரு பகுதியான மஹிந்திரா அண்ட் மஹிந்திரா லிமிடெட், இன்று புதிய BSIV இணக்க மோட்டார் கிரேடர்களை அறிமுகப்படுத்துவதாக அறிவித்தது - மஹிந்திரா RoadMaster G9075 மற்றும் G 9595 மற்றும் பேக்ஹோ லோடர்கள் - மஹிந்திரா EarthMaster SX, VX. அதன் கன்ஸ்ட்ரக்ஷன் எக்விப்மெண்ட் வணிகத்தின் துவக்கத்துடன் தனது BSIV போன்ற உற்பத்தி உபகரணங்களை அறிமுகப்படுத்தியது.

மகிந்திரா டிரக் அண்ட் பஸ் மற்றும் கன்ஸ்ட்ரக்ஷன் எக்விப்மெண்ட் பிசினஸ் ஹெட் ஜலஜ் குப்தா பேசுகையில், “கன்ஸ்ட்ரக்ஷன் எக்விப்மெண்ட் வணிகத்திற்கான எங்கள் பிராண்ட் நோக்கத்தை மனதில் வைத்து, எங்கள் வாடிக்கையாளர்களுக்கு செழிப்புக்கு உத்தரவாதம் அளிக்கும் வகையில், நாங்கள் இப்போது BSIV ரேஞ்ஜ் மஹிந்திரா EarthMaster பேக்ஹோ லோடரை அறிமுகப்படுத்துகிறோம் நாங்கள் ஒரு சேலஞ்சர் பிராண்ட் மற்றும் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு அதிக நம்பகத்தன்மை மற்றும் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு குறைந்த உரிமை செலவு மற்றும் இயக்கச் செலவுகளை வழங்கும் சிறந்த தீர்வுகளை வழங்குவதே எங்களது நோக்கமாக உள்ளது.

திரு. குப்தா மேலும் கூறினார், “ கன்ஸ்ட்ரக்ஷன் எக்விப்மெண்ட் துறையில் புதிய உமிழ்வு விதிமுறைகளை அறிமுகப்படுத்தியதன் மூலம், இன்று மஹிந்திரா RoadMaster மோட்டார் கிரேடர்களின் BSIV க்கு உட்பட்ட ரேஞ்ஜை அறிமுகப்படுத்துவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இந்த வலிமையான மற்றும் நம்பகமான தயாரிப்புகள் வாடிக்கையாளர் தேவைகளை ஆழமாக கருத்தில் கொண்டு இந்தியாவில் வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளன, இதுவே மஹிந்திராவின் தயாரிப்பு மேம்பாட்டு செயல்முறையின் தனிச்சிறப்பாகும்.”

MCE BSIV ரேஞ்ஜ் முழுவதிலும் ஒரு வலிமையான iMAXX டெலிமாடிக்ஸ் தீர்வு இருக்கும், இது வாடிக்கையாளர்களுக்கு கோளாறை அறிதல், முன்கணிப்பு மற்றும் பிரெடிக்டிவ் ஃப்ளீட் நிர்வாகத்துடன் இவ்வகையில் பல முன்னணி சிறப்பு அம்சங்களை தருகின்றது. சிறந்த சேவைகளை வழங்கும் நிறுவனத்தின் நம்பிக்கைக்கு ஏற்றவாறு, உயர்ந்த செயல்திறன், அதிக அப்டைம் மற்றும் இயக்க மற்றும் வைத்திருப்பதற்கான செலவு குறைதல், போன்றவை அதிக லாபத்திற்கு வழிவகுக்கும் என்ற எங்கள் உத்தரவாதத்தை நாங்கள் மீண்டும் உறுதி செய்கிறோம்.

மஹிந்திரா கன்ஸ்ட்ரக்ஷன் எக்விப்மெண்ட் (MCE) என்பது ஒரு இந்திய கன்ஸ்ட்ரக்ஷன் எக்விப்மெண்ட் OEM ஆகும், இது 2011 முதல் இந்திய வாடிக்கையாளர்களின் தேவைக்கேற்ப இயந்திரங்களை வடிவமைத்து உற்பத்தி செய்கிறது. MCE உறுதிசெய்யப்பட்ட அதிக வருமானத்துடன் சிறந்த வாடிக்கையாளருக்கு மிகச் சிறந்த மதிப்பை வழங்க உறுதிபூண்டுள்ளது மற்றும் Backhoe லோடர்கள், EarthMaster மற்றும் மோட்டார் கிரேடர்கள், RoadMaster (17% சந்தைப் பங்கு) ஆகியவற்றின் வெற்றிகரமான ரேஞ்ஜை கொண்டுள்ளது.

மஹிந்திரா EarthMaster BSIV மற்றும் SX Smart50 பற்றி


BSIV அறிமுகத்துடன், EarthMaster பேக்ஹோ லோடர்களின் முழு ரேஞ்ஜ் உற்பத்தித்திறன் மற்றும் அம்சங்களின் அடிப்படையில் மேம்படுத்தப்பட்டுள்ளது. நம்பகமான 74 ஹெச்பி CRi மஹிந்திரா என்ஜின் மூலம் இயக்கப்படுகிறது, இது இப்போது BSIII ஐ விட 13% கூடுதல் டார்க்கை உற்பத்தி செய்கிறது, இதனால் இயந்திரத்தின் லோடிங் செயல்திறனை மேம்படுத்துகிறது. அதிக ஓட்டம் கையாளும் திறன் மற்றும் பிற மேம்பாடுகளைக் கொண்ட மேம்படுத்தப்பட்ட ஹைட்ராலிக் அமைப்புடன், ஒட்டுமொத்த உற்பத்தித் திறன் 10% மேம்படுத்தப்பட்டுள்ளது. பனானா பூம், ஜாய்ஸ்டிக் லீவர், வலிமையான டிசைன் மற்றும் பெரிய பக்கெட் போன்ற தனித்தன்மை வாய்ந்த சிறப்பம்சங்களுடன், சுரங்கம், தோண்டுதல், கிரஷ்ஷிங், கட்டிடம் கட்டுதல் அல்லது கட்டுமானத் துறையில் மற்ற வேலைகளுக்கான அனைத்து வகையான பேக்ஹோ பயன்பாடுகளுக்கும் EarthMaster ரேஞ்ஜ் ஏற்றது.. இது SX மற்றும் VX என இரண்டு வகைகளில் கிடைக்கும்.

SX Smart50 என்பது ஹெச்பி ரேஞ்ஜில் ஒரு புதிய குறைந்த அளவிலான தயாரிப்பு ஆகும், இது ஹயரர் பிரிவுக்கு உகந்த தீர்வாகும். இத்தயாரிப்பு நிரூபிக்கப்பட்ட மஹிந்திரா 50HP Ditech BSIII என்ஜின் மற்றும் 74HP க்கு சமமான பேக்ஹோ உற்பத்தித்திறனை வழங்குவதற்கு ஏற்ப ஹைட்ராலிக்ஸ் மூலம் கட்டமைக்கப்பட்டுள்ளது. SX Smart50 மிகவும் போட்டித்தன்மை கொண்ட குறைந்த மார்ஜின் கொண்ட செக்மெண்டில் யோசித்து செலவழிக்கும் வாடிக்கையாளர்களின் தேவையை பூர்த்தி செய்கிறது.

புதிய EarthMaster எர்கனாமிக் ரீதியாக ஆபரேட்டர் வசதியை முதன்மையாக வழங்க டிசைன் செய்யப்பட்டுள்ளது. வண்ணக் கண்ணாடி, கோட் ஹேங்கர், மொபைல் மற்றும் வாட்டர் பாட்டில் ஹோல்டர் ஆகியவை கொண்ட நன்கு இடவசதி கொண்ட கேபின் எங்கள் ஆபரேட்டர்களுக்கு சௌகரியமாகவும் பாதுகாப்பாகவும் இருக்கும். எங்கள் வாடிக்கையாளர்களுக்கு அதிகபட்ச நன்மைகள் மற்றும் சொத்தை வழங்கும் நோக்கத்துடன், EarthMaster ரேஞ்ஜ் இவ்வகையிலுள்ள அந்தந்த ரேஞ்ஜிகளிலேயே, தொழில்துறையில் குறைந்த பராமரிப்பு செலவுள்ள வகையில் டிசைன் செய்யப்பட்டுள்ளது. .

மஹிந்திரா RoadMaster BSIV பற்றி


புதிய BSIV RoadMaster ரேஞ்ஜ் உகந்த தீர்வை வழங்குகிறது மற்றும் ஸ்மார்ட் சிட்டிகள், பாரத்மாலா போன்ற அரசாங்க முதன்மைத் திட்டங்களுடன் முக்கிய மாவட்டச் சாலைகள், மாநில நெடுஞ்சாலைகள், எல்லைப்புறச் சாலைகள் மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளின் விரிவாக்கத்திற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. சாலை ஒப்பந்ததாரரின் கிரேடிங் தேவைகளைப் பூர்த்தி செய்கிறது.

G9075 ஆனது 74HP CRI என்ஜின் மற்றும் 350 Nm வரையிலான டார்க்குடன் இயங்குகிறது, இது மாநில நெடுஞ்சாலைகள், கிராமப்புற சாலைகள், மாவட்ட சாலைகள் மற்றும் PMGSY இன் கீழ் உள்ள பிற திட்டங்களுக்கு ஏற்றதாக இருக்கிறது. இந்த மோட்டார் கிரேடர் 3 மீ (10 அடி) அகலமான பிளேடுடன் இணைக்கப்பட்டுள்ளது மற்றும் வழக்கமான மோட்டார் கிரேடர்களை விட 40% குறைவான விலையில் குறைபாடற்ற தரத்தை வழங்குவதற்கு ஏற்றதாக இருக்கின்றது.

G9595 ஆனது 95 HP CRi என்ஜின் மற்றும் 400 Nm வரையிலான உச்ச டார்க் மூலம் இயக்கப்படுகிறது, இது தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் அவற்றை உயர்த்தும் செயல்முறை, ரயில் பாதைகள் மற்றும் தொழில்துறை நிலத்தை சமன் செய்வதற்கு ஏற்றதாக உள்ளது. ஆபரேட்டரின் சௌகரியத்தை கருத்தில் கொண்டு, G9595 எர்கனாமிக் ரீதியாக டிசைன் செய்யப்பட்டு, ஏர் கன்டிஷன் கேபினுடன் வருகிறது. இது ஆபரேட்டருக்கு சோர்வில்லாத இயக்க அனுபவத்தை வழங்குகிறது, இதன் மூலம் ஒட்டுமொத்த உற்பத்தித்திறனை மேம்படுத்த உதவுகிறது.

RoadMaster ரேஞ்ஜ் பெரிய ஒப்பந்தக்காரர்களுக்கான தயாரிப்பு போர்ட்ஃபோலியோவை மேம்படுத்தும் மற்றும் நடுத்தர சாலைகள், மாநில நெடுஞ்சாலைகள் மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளை நிர்மாணிப்பதற்கு பொருத்தமான தீர்வாக இருக்கும். அணைகள், ரயில் பாதைகள் அமைப்பதற்கும், தொழில்துறை கட்டுமானம் மற்றும் துறைமுகத்துக்கு பெரிய நிலங்களை சமன் செய்வதற்கும் தோண்டுதல் போன்ற பணிகளுக்கும் இது ஏற்றதாக கூறப்படுகிறது.

iMAXX பற்றி


மஹிந்திரா கன்ஸ்ட்ரக்ஷன் எக்விப்மெண்ட் ஆனது, கன்ஸ்ட்ரக்ஷன் எக்விப்மெண்ட் துறையில் தனது வாடிக்கையாளர்களுக்கு டெலிமாடிக்ஸ் தீர்வுகளை வழங்குவதில் எப்போதும் முன்னணியில் உள்ளது. பாரம்பரியத்துடன் தொடரும் நாங்கள் iMAXX டெலிமாடிக்ஸ் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சியடைகிறோம் - இது EarthMaster மற்றும் RoadMaster முழு ரேஞ்ஜிலும் ஒரு அறிகுறி, கோளாறு அறிதல் மற்றும் ஃப்ளீட்டின் மேலாண்மை அமைப்பு. உங்கள் சாதனம் மற்றும் உங்கள் வணிகத்தைப் பற்றிய முக்கியத் தகவலைப் அப்டேட் செய்து வைத்திருக்கும். இதை உங்கள் தனிப்பட்ட உதவியாளர் என்று நீங்கள் வைத்துகொள்ளலாம். . iMAXX ஏற்கனவே எங்கள் டிரக் வணிகத்தில் சோதித்து பயன்படுத்தப்பட்ட தீர்வுகளை கண்காணித்து வருகிறது, மேலும் இது வாடிக்கையாளர்களுக்கு பல வழிகளில் பயனளித்துள்ளது. பயனுள்ள இயந்திரத்துடன், எந்தவொரு பெரிய பிரேக் டவுனை தவிர்க்கும் பராமரிப்பை அறிவிப்பதன் மூலம் இது வாடிக்கையாளருக்கு எச்சரிக்கை செய்கிறது.

இந்த தயாரிப்புகள் ஒரு ஆண்டு வரம்பற்ற மணிநேர உத்தரவாதத்துடன் வருகின்றன மற்றும் பழுதுபார்ப்பதற்கான அதிக செலவுகள் பற்றிய வாடிக்கையாளரின் கவலைகளை நீக்குகிறது. மஹிந்திராவின் என்ஜினியரிங் மற்றும் உற்பத்தித் திறமையால் மட்டுமே இது சாத்தியமாகிறது, ஏனென்றால் இது கடுமையான சோதனை மற்றும் சிறந்த பாகங்கள் மற்றும் என்ஜினின் பொதுவான டிசைனை கொண்டுள்ளது. .

மஹிந்திரா கட்டுமான உபகரணங்கள் கடினமான நிலப்பரப்பு மற்றும் கடினமான பயன்பாடுகளுக்காக கடுமையாக சோதிக்கப்பட்டது. இது அனைத்து செயல்திறன், பாதுகாப்பு மற்றும் நம்பகத்தன்மை தரநிலைகளுக்கு உட்பட்டது. மேலும் இதன் பின்னணியில் மஹிந்திராவின் டீலர் சேல்ஸ் மற்றும் சர்வீஸ் நெட்வொர்க் உள்ளது. மேலும் மஹிந்திராவின் 50+ டீலர் சேல்ஸ் மற்றும் சர்வீஸ் நெட்வொர்க்குடன் உலகம் முழுவதும் பரவலான அணுகலைக் கொண்டுள்ளது. இது புதுமையான தொழில்நுட்பம் கொண்டுள்ளதால் மிக சிக்கனமானது, அதே நேரத்தில் இணையற்ற தரம், ஆடம்பரமான ஸ்டைலிங், ஆபரேட்டருக்கான சௌகரியம் மற்றும் அதன் தனித்துவமான டெலிமாடிக்ஸ் தொழில்நுட்பம், IMAXX ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

மஹிந்திராவின் கட்டுமான உபகரணங்கள் புனேவில் உள்ள சாக்கனில் உள்ள மஹிந்திராவின் அதிநவீன தொழிற்சாலையில் தயாரிக்கப்படுகின்றன. இந்தியாவின் கடினமான நிலப்பரப்பு மற்றும் சுமைகளைத் தாங்கும் வகையில் உருவாக்கப்பட்ட இந்தத் தயாரிப்பை உருவாக்க மஹிந்திராவின் புராடக்ட் டெவலப்மெண்ட் டீம் வாடிக்கையாளர்களின் எண்ணங்கள் மற்றும் கருத்துக்களை விரிவாகப் பயன்படுத்தியுள்ளது. கூடுதலாக, சமீபத்திய வாகன அமைப்புகள் மற்றும் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதன் மூலம் தயாரிப்புகள் அனைத்தையும் நியாயமான அம்சங்களையும் போட்டி விலையில் வழங்குகின்றது.

எங்கள் சோஷியல் மீடியா சேனல்கள்:

ஃபேஸ்புக் - https://www.facebook.com/MahindraCE
ட்விட்டர் - https://twitter.com/Mahindra_CE
யூடியூப் - https://www.youtube.com/channel/UCRsspxEKEwWvnLZ4BfX6WpA
லிங்குடுஇன் - https://in.linkedin.com/company/mahindraconstructionequipment
இன்ஸ்டாகிராம் - https://www.instagram.com/mahindraconstructionequipment/

மஹிந்திரா பற்றி


மஹிந்திரா குழுமம் 19 பில்லியன் (1900 கோடி) அமெரிக்க டாலர்கள் மதிப்புள்ள நிறுவனங்களின் கூட்டு அமைப்பு ஆகும். புதுமையான மொபிலிட்டி தீர்வுகள், கிராமப்புற செழிப்பு மூலம் மக்களின் விரைவான முன்னேற்றத்திற்கு வழி வகுக்கிறது, நகர்ப்புற வாழ்க்கையை மேம்படுத்துகிறது, புதிய வணிகங்களை இயக்குகிறது மற்றும் சமுதாயத்தை உயர்த்துகிறது. இது இந்தியாவில் யுடிலிட்டி வெஹிகிள்ஸ், தகவல் தொழில்நுட்பம், நிதிச் சேவைகள் மற்றும் வெகேஷன் ஓனர்ஷிப் ஆகியவற்றில் முன்னணி வகிக்கிறது. அளவின் அடிப்படையில் உலகின் மிகப்பெரிய டிராக்டர் நிறுவனமாகும். புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, வேளாண்வணிகம், லாஜிஸ்டிக்ஸ், ரியல் எஸ்டேட் மேம்பாடு ஆகியவற்றின் வணிகத்திலும் வலிமையான நிறுவனமாக இருக்கிறது. இந்தியாவில் தனது தலைமையகமாக கொண்டுள்ள மஹிந்திரா.நிறுவனம் சுமார் 100 நாடுகளில் 2,56,000 பணியாளர்களைக் கொண்டுள்ளது
www.mahindra.com / Twitter and Facebook: @MahindraRise

ஊடகத் தொடர்பு விவரங்கள்


குமாரி. வர்ஷா சைனானி
சீனியர் வைஸ் பிரசிடெண்ட் =க்ரூப் கம்யூனிகேஷன்
மஹிந்திரா அண்டு மஹிந்திரா லிமிடெட்
மொபைல் +91 9987340055
மின்னஞ்சல்- [email protected]

தயாரிப்பு/மார்க்கெட்டிங் தொடர்பான விசாரணைகளுக்கு தொடர்பு


கொள்ளவும்
ராஜீவ் மாலிக்
வைஸ்–பிரசிடெண்ட் மற்றும் ஹெட் மார்கெட்டிங்
ட்ரக் அண்டு பஸ் மற்றும் கன்ஸ்ட்ரக்ஷன் எக்விப்மெண்ட்
மஹிந்திரா அண்டு மஹிந்திரா லிமிடெட்
மொபைல் +91 9594968899
மின்னஞ்சல்முகவரி – [email protected]:

மஹிந்திரா கன்ஸ்ட்ரக்ஷன் எக்விப்மெண்ட்டின் மஹிந்திரா RoadMaster G90 2019ல் CIA வேர்ல்டு கன்ஸ்ட்ரக்ஷன் அவார்ட்ஸில் விருதை வென்றது.

மஹிந்திரா கன்ஸ்ட்ரக்ஷன் எக்விப்மெண்ட்டின் மஹிந்திரா RoadMaster G90 2019ல் CIA வேர்ல்டு கன்ஸ்ட்ரக்ஷன் அவார்ட்ஸில் விருதை வென்றது.

CIA World Construction Award 2019

மும்பை, 26 பிப்ரவரி, 2019: 17.8 பில்லியன் (1780 கோடி) டாலர் மஹிந்திரா குழுமத்தின் ஒரு பகுதியான மஹிந்திரா & மஹிந்திரா லிமிடெட் (எம்&எம் லிமிடெட்), அதன் புதிய மோட்டார் கிரேடரான மஹிந்திரா RoadMaster G90 தனது கன்ஸ்ட்ரக்ஷன் எக்விப்மெண்ட் வணிகத்திலிருந்து புதுமையான தயாரிப்புகளை அறிமுகப்படுத்தியுள்ளதாக சமீபத்தில் அறிவித்தது. CIA வேர்ல்ட் கன்ஸ்ட்ரக்ஷன் விருதுகள் 2019 இல் இன்னோவேடிவ் புராடக்ட் ஆஃப் தி இயர் விருதை இது வென்றது.

சமீபத்தில் மும்பையில் நடைபெற்ற விழாவில், எம்&எம் லிமிடெட், மஹிந்திரா கன்ஸ்ட்ரக்ஷன் எக்விப்மெண்ட், DGM பிராடக்ட் பிளானிங் திரு. ராகுல் ஜோஷி, மற்றும் சீனியர் மானேஜர் மார்க்கெட்டிங் திரு. ருசிர் அகர்வால் ஆகியோர் விருதைப் பெற்றனர்.

இந்த வருடாந்திர அவார்டு இந்திய கட்டுமானத் துறையில் சிறப்பாகப் பணியாற்றியவர்களுக்கு வழங்கப்படும் விருதாகும்.. புதுமையான தயாரிப்புகள் மூலம் ரோடு கன்ஸ்ட்ரக்ஷன் எக்விப்மெண்ட் துறையில் புரட்சியை ஏற்படுத்தியதில் மஹிந்திராவின் பங்கை இந்த விருது அங்கீகரிக்கிறது. மஹிந்திரா கன்ஸ்ட்ரக்ஷன் எக்விப்மெண்ட் இந்தியா மற்றும் இதர வளரும் நாடுகளுக்கு பொருத்தமான தனித்துவமான தயாரிப்புகளை கொண்டு வருவதற்கான அயராத முயற்சிகளுக்காக அறியப்படுகிறது.

மோட்டார் கிரேடர்களின் RoadMaster ரேஞ்ஜானது தேசிய மற்றும் சர்வதேச அளவில் சுற்றுச்சூழலுக்கு உகந்த தயாரிப்புகளுக்கான புதுமைகளின் வரிசையில் 5 தொழில் பட்டங்களை வென்று சாதனை படைத்துள்ளது. தொழில்துறையில் அங்கீகாரத்தைத் தவிர, மஹிந்திராவிடமிருந்து ரைஸ் விருதுகள் மற்றும் MD டாப் 10 உட்பட 2 மதிப்புமிக்க விருதுகளையும் பெற்றுள்ளது.

CIA வேர்ல்டு கன்ஸ்ட்ரக்ஷன் அவார்ட்ஸ் பற்றி


CIA வேர்ல்ட் என்று பிரபலமாக அறியப்படும் எபிக் மீடியா, தி கன்ஸ்ட்ரக்ஷன் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் ஆர்கிடெக்ட் வேர்ல்ட் இதழால் 2011 இல் தொடங்கப்பட்டது. கன்ஸ்ட்ரக்ஷன், இன்ஃபராஸ்ட்ரக்ச்சர் மற்றும் ஆர்கிடெக்ஸ்சர் ஆகிய மூன்று பகுதிகளை இலக்காகக் கொண்ட ஒரே இந்திய இதழ் இது. CIA வேர்ல்ட் கன்ஸ்ட்ரக்ஷன் அவார்ட்ஸ், கட்டுமானத் துறையுடன் தொடர்புடைய பில்டர்கள், ஆர்கிடெக்ட், கான்ட்ராக்டர்ஸ் மற்றும் கன்சல்டன்ட்ஸ் மட்டுமல்லாமல், கட்டுமான உபகரணங்கள், கன்ஸ்ட்ரக்ஷன் கெமிகல்ஸ், பெயிண்ட் மற்றும் கோட்டிங்ஸ், கன்ஸ்ட்ரக்ஷன் டெக்னாலஜி போன்ற தொடர்புடைய துறைகளையும் பாராட்டவும், மற்றும் ஊக்குவிக்கவும் நோக்கமாக உள்ளது. இது இந்த அவார்ட்ஸின் 5வது பதிப்பாகும்.

மஹிந்திரா RoadMaster G90 பற்றி


G90 ஆனது சாலை ஒப்பந்ததாரர்களுக்குப் பல நன்மைகளை வழங்குகிறது மற்றும் முழு ரோடு மற்றும் ரயில்வே ஒப்பந்ததாரர்களின் பணிகளில் ஸ்ப்ரெட்டிங் மற்றும் கிரேடிங்கிற்கான சிறந்த இயந்திரமாகும். இது ஒரு உகந்த தீர்வை வழங்குகிறது மற்றும் ஸ்மார்ட் நகரங்களுக்கான சாலை ஒப்பந்ததாரர்களுக்கு கிரேடிங் தேவைகளை பூர்த்தி செய்கிறது. அதாவது முக்கிய மாவட்ட சாலைகள், மாநில நெடுஞ்சாலைகள், எல்லைப்புற சாலைகள் மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளின் விரிவாக்கத்திற்கான அரசாங்க முதன்மைத் திட்டங்களைப் பூர்த்தி செய்கிறது.

G75 மஹிந்திராவால் உருவாக்கப்பட்ட 91 HP DiTEC இன்ஜின் மூலம் இயக்கப்படுகிறது, இது 3 மீ (10 அடி) அகலமான பிளேடுடன் இணைக்கப்பட்டுள்ளது. வழக்கமான மோட்டார் கிரேடர்களுடன் ஒப்பிடும்போது, இந்த கருவி எதையும் சமரசம் செய்யாமல் 40% அதிக கிரேடிங்கை வழங்குகிறது.

இந்த தயாரிப்புகள் ஒரு ஆண்டு வரம்பற்ற மணிநேர வாரண்டி உடன் வருகின்றன. மேலும் பழுதுபார்ப்பதற்கு அதிக செலவாகும் என்ற வாடிக்கையாளரின் கவலைகளை நீக்குகிறது. மஹிந்திராவின் என்ஜினியரிங் மற்றும் உற்பத்தித் திறமையால் மட்டுமே இது சாத்தியமாகிறது, கடுமையான சோதனை மற்றும் சிறந்த பாகங்கள் மற்றும் இயந்திரத்தின் பொதுவான டிசைன்ஆகியவற்றின் ஆதரவு இதற்கு உள்ளது.

G90 கடினமான நிலப்பரப்பு மற்றும் கடினமான பயன்பாடுகளுக்காக கடுமையாக சோதிக்கப்படுகிறது. இது அனைத்து செயல்திறன், பாதுகாப்பு மற்றும் நம்பகத்தன்மை தரநிலைகளுகளுக்கு உட்பட்டது மேலும் இதற்கு மஹிந்திராவின் டீலர் சேல்ஸ் மற்றும் சர்வீஸ் நெட்வொர்க்கின் ஆதரவு உள்ளது. மஹிந்திராவின் 60+ டீலர் சேல்ஸ் மற்றும் சர்வீஸ் நெட்வொர்க்கின் ஆதரவு இருப்பதால் உலகம் முழுவதும் பரவலாக அணுக முடியும். இது புதுமையான தொழில்நுட்பத்துடன் சிக்கனமானது மற்றும் அதே நேரத்தில் இணையற்ற தரம், ஆடம்பரமான ஸ்டைலிங், ஆபரேட்டர் வசதி மற்றும் அதன் தனித்துவமான டெலிமாடிக்ஸ் டெக்னாலஜியான டிஜிசென்ஸ் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

மஹிந்திரா RoadMaster G90 புனேவில் உள்ள சாக்கனில் உள்ள மஹிந்திராவின் அதிநவீன தொழிற்சாலையில் தயாரிக்கப்படுகிறது. இந்தியாவின் கடினமான நிலப்பரப்பு மற்றும் சுமைகளைத் தாங்கும் வகையில் உருவாக்கப்பட்ட இந்தத் தயாரிப்பை உருவாக்குவதற்காக மஹிந்திராவின் புராடக்ட் டெவலப்மெண்ட் டீம் வாடிக்கையாளர் எண்ணங்கள் மற்றும் கருத்துக்களை விரிவாகப் பயன்படுத்தியுள்ளது. கூடுதலாக, குறைவான விலையில் சமீபத்திய வாகன அமைப்புகள் மற்றும் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதன் மூலம் தயாரிப்புகள் அனைத்து நியாயமான அம்சங்களையும் வழங்குகின்றன.

மஹிந்திரா பற்றி


மஹிந்திரா குழுமம், அதன் தனித்துவமான மொபிலிட்டி தீர்வுகள் மூலம், மக்களின் முன்னேற்றத்திற்கு வழி வகுக்கிறது, கிராமப்புற செழிப்புத் தருகிறது, நகர்ப்புற வாழ்க்கையை மேம்படுத்துகிறது மற்றும் புதிய வணிகங்களை செயல்படுத்துகிறது.

இந்தியாவின் மும்பையில் உள்ள 19 பில்லியன் (1900 கோடி) டாலர் மதிப்புள்ள பன்னாட்டு நிறுவனமான மஹிந்திரா 100க்கும் மேற்பட்ட நாடுகளில் 200,000 பேருக்கு வேலை வாய்ப்புகளை வழங்குகிறது. மஹிந்திரா பொருளாதார வளர்ச்சியைத் தூண்டும் முக்கிய தொழில்களில் செயல்பட்டு வருகிறது. மற்றும் டிராக்டர்கள், யுடிலிட்டி வெஹிகிள்ஸ், தகவல் தொழில்நுட்பம், நிதிச் சேவைகள் மற்றும் வெகேஷன் ஓனர்ஷிப் ஆகியவற்றில் தொடர்ந்து முன்னணியில் இருக்கிறது.. வேளாண் வணிகம், ஏரோஸ்பேஸ், உதிரி பாகங்கள், ஆலோசனை சேவைகள், பாதுகாப்பு, எரிசக்தி, தொழில்துறை உபகரணங்கள், லாஜிஸ்டிக்ஸ், ரியல் எஸ்டேட், சில்லறை விற்பனை,ஸ்டீல், கமர்ஷியல் வெஹிகிள்ஸ் மற்றும் இரு சக்கர வாகனத் தொழில்களிலும் மஹிந்திரா மிக வலிமையான நிலையில் முன்னிலையில் உள்ளது.

2015 ஆம் ஆண்டில், எகனாமிக் டைம்ஸ் நடத்திய ஆய்வில், இந்தியாவில் CSRக்கான சிறந்த நிறுவனமாக மஹிந்திரா அண்டு மஹிந்திரா அங்கீகரிக்கப்பட்டது. 2014 ஆம் ஆண்டில், மஹிந்திரா ஃபோர்ப்ஸ் குளோபல் 2000 இல் ஒரு சிறப்பு இடத்தைப் பெற்றது, இது உலகின் மிகப்பெரிய மற்றும் மிகவும் சக்திவாய்ந்த பொது நிறுவனங்களின் பெயர்களின் பட்டியலில் இடம்பெற்றது. அவற்றின் வருவாய், லாபம், சொத்துக்கள் மற்றும் மதிப்பு ஆகியவற்றைக் கொண்டு மதிப்பிடப்படுகிறது. மஹிந்திரா குழுமத்திற்கு 2013 இல் 'எமர்ஜிங் மார்க்கெட்ஸ்' பிரிவில் பைனான்சியல் டைம்ஸ் ' போல்ட்னஸ் இன் பிசினஸ்' விருது வழங்கப்பட்டது.

எங்களை www.mahindraconstructionequipment.com இணையத்தளத்தில் காணவும்

எங்கள் சோஷியல் மீடியா சேனல்கள்:

ஃபேஸ்புக் - https://www.facebook.com/MahindraCE
ட்விட்டர் - https://twitter.com/Mahindra_CE
யூடியூப் - https://www.youtube.com/channel/UCRsspxEKEwWvnLZ4BfX6WpA
லிங்குடுஇன் - https://in.linkedin.com/company/mahindraconstructionequipment
இன்ஸ்டாகிராம் - https://www.instagram.com/mahindraconstructionequipment/

மஹிந்திரா தனது ரோடு கன்ஸ்ட்ரக்ஷன் எக்விப்மெண்ட் பிரிவுக்கான ரேஞ்ஜை விரிவுபடுத்தியுள்ளது.

மஹிந்திரா தனது ரோடு கன்ஸ்ட்ரக்ஷன் எக்விப்மெண்ட் பிரிவுக்கான ரேஞ்ஜை விரிவுபடுத்தியுள்ளது.

10, டிசம்பர், 2018, புனே: மஹிந்திரா & மஹிந்திரா லிமிடெட், 19 பில்லியன் (1900) அமெரிக்க டாலர் மதிப்புள்ள மஹிந்திரா குழுமத்தின் அங்கமான மஹிந்திரா அண்ட் மஹிந்திரா லிமிடெட், இன்று தனது கன்ஸ்ட்ரக்ஷன எக்விப்மெண்ட் வணிகத்தின் கீழ் அதன் மோட்டர் கிரேடரான மஹிந்திரா RoadMaster G90ஐ அறிவித்தது

Baumacon Expo 2018 நிகழ்ச்சியில் பேசிய மணீஷ் அரோரா, “தனது வாடிக்கையாளர்களுக்கு தனித்துவமான தயாரிப்புகள் மற்றும் சேவைகளை வழங்கும் மஹிந்திராவின் பார்வைக்கு ஏற்ப, மஹிந்திரா RoadMaster G90 மோட்டார் கிரேடரை அறிமுகப்படுத்தியதன் மூலம் இன்று வேகமாக வளர்ந்து வரும் ரோடு கன்ஸ்ட்ரக்ஷன் எக்விப்மெண்ட் பிரிவில்மற்றொரு புதுமையை வழங்கியுள்ளோம். சாலை ஒப்பந்ததாரர்களின் சகோதரத்துவத்தின் ஆழமான தேவைகளைக் கருத்தில் கொண்டு தயாரிப்பு இந்தியாவில் வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளது.

Mahindra RoadMaster G90 பற்றி
G90 கடினமான நிலப்பரப்பு மற்றும் கடினமான பயன்பாடுகளுக்காக கடுமையாக சோதிக்கப்படுகிறது. இது அனைத்து செயல்திறன், பாதுகாப்பு மற்றும் நம்பகத்தன்மை தரநிலைகளுக்கு உட்பட்டது. மேலும் இதற்கு மஹிந்திராவின் டீலர் சேல்ஸ் மற்றும் சர்வீஸ் நெட்வொர்கின் ஆதரவு இருக்கிறது, மஹிந்திராவின் 60+ டீலர் சேல்ஸ் மற்றும் சர்வீஸ் நெட்வொர்க்கின் ஆதரவு இருப்பதால் உலகம் முழுவதும் இதை பரவலாக அணுக முடியும். இது புதுமையான தொழில்நுட்பத்துடன் சிக்கனமானது மற்றும் அதே நேரத்தில் இணையற்ற தரம், ஆடம்பரமான ஸ்டைலிங், ஆபரேட்டர் வசதி மற்றும் அதன் தனித்துவமான டெலிமாடிக்ஸ் டெக்னாலஜியான டிஜிசென்ஸ் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

மஹிந்திரா RoadMaster G90 புனேவில் உள்ள சாக்கனில் உள்ள மஹிந்திராவின் அதிநவீன தொழிற்சாலையில் தயாரிக்கப்படுகிறது. இந்தியாவின் கடினமான நிலப்பரப்பு மற்றும் சுமைகளைத் தாங்கும் வகையில் உருவாக்கப்பட்ட இந்தத் தயாரிப்பை உருவாக்க மஹிந்திராவின் புராடக்ட் டெவலப்மெண்ட் டீம் வாடிக்கையாளர் எண்ணம் மற்றும் கருத்துக்களை விரிவாகப் பயன்படுத்தியுள்ளது. கூடுதலாக, குறைந்த விலையில் சமீபத்திய வாகன அமைப்புகள் மற்றும் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதன் மூலம் தயாரிப்புகள் அனைத்து நியாயமான அம்சங்களையும் வழங்குகிறது.

மஹிந்திரா பற்றி


மஹிந்திரா குழுமம் 19 பில்லியன்(1900 கோடி) அமெரிக்க டாலர்கள் மதிப்புள்ள நிறுவனங்களின் கூட்டு அமைப்பு ஆகும். . தனி நபருக்கான மொபிலிட்டி தீர்வுகள், கிராமப்புற செழிப்பின் மூலம் மக்களின் முன்னேற்றத்திற்கு வழி வகுக்கிறது. விரைவுபடுத்துகிறது, நகர்ப்புற வாழ்க்கையை மேம்படுத்துகிறது, புதிய வணிகங்களை செயலாக்குகிறது. சமுதாயத்தை உயர்த்துகிறது.இது யுடிலிட்டி வெஹிக்கிள், தகவல் தொழில்நுட்பம், நிதிச் சேவைகள் மற்றும் வெகேஷன் ஓனர்ஷிப் மற்றும் ஆகியவற்றில் முன்னணி வகிக்கிறது. இது அளவின் அடிப்படையில் உலகின் மிகப்பெரிய டிராக்டர் நிறுவனமாகும். மஹிந்திரா இந்தியாவில் தலைமையகத்துடன் சுமார் 100 நாடுகளில் 2,00,000 பணியாளர்களைக் கொண்டுள்ளது. இது வேளாண்வணிகம், உதிரிபாகங்கள், கமர்ஷியல் வெஹிகிள்ஸ், ஆலோசனை சேவைகள், எரிசக்தி, தொழில்துறை உபகரணங்கள், லாஜிஸ்டிக்ஸ், ரியல் எஸ்டேட், ஸ்டீல், ஏரோஸ்பேஸ் பாதுகாப்பு மற்றும் இரு சக்கர வாகனங்கள் ஆகியவற்றிலும் வலிமையாக முன்னணியில் இருக்கிறது. இந்தியாவை தலைமையகமாக கொண்ட மஹிந்திரா சுமார் 100 நாடுகளில் 2,00,000 பணியாளர்களைக் கொண்டுள்ளது.

இணையதளத்தில் மஹிந்திரா பற்றி மேலும் அறியுங்கள் www.mahindraconstructionequipment.com/ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக்:@MahindraCE

மீடியா தொடர்பு விவரங்கள்
ருசிர் அகர்வால்
மஹிந்திரா அண்டு மஹிந்திரா லிமிடெட்
ஆஃபீஸ் டைரெக்ட் லைன் - + 91 22 33133065
ஆஃபீஸ் மின்னஞ்சல் முகவரி- [email protected]