Company Overview | Mahindra Construction Equipment
with you hamesha - 1800 209 6006
with you hamesha - 1800 209 6006 


நிறுவனத்தின் விவரங்கள்

நிறுவனத்தின் விவரங்கள்

மஹிந்திரா கன்ஸ்ட்ரக்ஷன் எக்விப்மெண்ட் 17.8 பில்லியன் (1780 கோடி) அமெரிக்க டாலர்கள் மதிப்புள்ள ஒரு பிராண்டாகும் மற்றும் வளர்ந்து வரும் மஹிந்திரா குழும நிறுவனங்களின் உலகளாவிய கூட்டமைப்பாகும். உலகெங்கிலும் உள்ள 100 நாடுகளில் 200,000 ஊழியர்களைக் கொண்ட பெருமையுடன் உயர்ந்து நிற்கும் மஹிந்திரா குழுமம், உலகின் முதல் 2000 சக்திவாய்ந்த பிராண்டுகளின் ஃபோர்ப்ஸ் பட்டியலில் இடம் பெற்றுள்ளது. இயக்கம், கிராமப்புற செழிப்பு, தகவல் தொழில்நுட்பம், நிதிச் சேவைகள், சுத்தமான எரிசக்தி, பாதுகாப்பு, ஹாஸ்பிடாலிட்டி, ரியல் எஸ்டேட் மற்றும் சில்லறை வணிகம் உள்ளிட்ட 20 முக்கிய தொழில்களில் இது உலகளவில் மிக வலிமையான நிறுவனமாகத் திகழ்ந்து வருகிறது

"ரைஸ்" என்ற உற்சாக மனப்பான்மையுடன் பல தசாப்தங்களாக உயர்மட்ட விவசாயத்திற்கான உபகரணங்கள் மற்றும் பயன்பாட்டு வாகனங்களை தயாரிப்பதில் அதன் பரந்த அனுபவத்தின் பின்னணியுடன், கன்ஸ்ட்ரக்ஷன் எக்விப்மெண்ட் உற்பத்தித் துறையில் துணிச்சலுடன் இறங்கியுள்ளது. மஹிந்திரா கன்ஸ்ட்ரக்ஷன் எக்விப்மெண்ட், சாமானியர்களுக்கு உதவும் வகையில், “ரைஸ்”, என்ற கோட்பாட்டின்படி தனது மெஷின்களில் புரட்சிகரமான தொழில்நுட்பத்தை செயல்படுத்தும் தயாரிப்புகளைக் கொண்டு வந்துள்ளது. இந்தியாவில் கட்டுமானத் துறையில் இதுவரை கண்டிராத தொழில்நுட்பம் இதுவாகும்.

இந்தியாவில் கட்டுமான உபகரணப் பிரிவில் புரட்சியை ஏற்படுத்தும் வகையில் மிகச்சிறந்த தயாரிப்புகள் மற்றும் சேவைகளை வழங்குவதில் மஹிந்திரா கன்ஸ்ட்ரக்ஷன் எக்விப்மெண்ட் நிறுவனம் முன்னணியில் உள்ளது . மஹிந்திரா கன்ஸ்ட்ரக்ஷன் எக்விப்மெண்ட் நிறுவனம் இந்த குழுமத்தில் வெர்டிகல் B2B வின் கீழ் வருகிறது . மேலும் இதற்கு ஆதரவாக நாடு முழுவதும் அதன் வலிமையான டீலர்கள் மற்றும் சர்வீஸ் சென்டர்களின் நெட்வொர்க்குகள் ள் உள்ளன.

மஹிந்திரா குழுமம் புனேவில் உள்ள சக்கன் என்ற இடத்தில் 10,000 சதுர மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ள தொழிற்சாலையில் இத்தொழிலைத் தொடங்கியது. அதி நவீன தொழில்நுட்பம் மற்றும் முழுமையான தானியங்கி ரோபோடிக் வெல்டிங் யூனிட்டுகள் சிறந்த தயாரிப்புகளைகுறைபாடுகள் இல்லாத ஃபினிஷுடன் உருவாக்கப் பயன்படுத்தப்படுகின்றன. ஒவ்வொரு தயாரிப்பும் விற்பனைக்கு வருவதற்கு முன்பாக அட்வான்ஸ்டு NOVA-C ஐ செயல்படுத்தி கடுமையான மற்றும் முழுமையான தர சோதனைக்களுக்கு உட்படுத்தப்படுகிறது.

"ரைஸ்" ஆவதற்கு அதிக எண்ணிக்கையிலான மக்களுக்கு உதவுவதன் மூலம் அதன் தொழிலில் தலைவராக இருக்க வேண்டும் என்ற அதன் லட்சியத்தை நிறைவேற்றுகின்ற அதே நேரத்தில் மஹிந்திரா கன்ஸ்ட்ரக்ஷன் எக்விப்மென்ட் தனது குழுமத்தின் மதிப்புகளை நிலைநிறுத்த அதன் தொழிலில் உள்ள முன்னோடிகளைப் பின்பற்ற விரும்புகிறது.

மஹிந்திரா கன்ஸ்ட்ரக்ஷன் எக்விப்மெண்ட் டிவிஷன் ISO 9001:2015 சான்று பெற்றது.